18th August 2021 08:00:46 Hours
வவுனியா விங்கானக்குளம் சின்னாதாப்பன் கிராம சேவகர் பிரிவின் பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு அவசியமான புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில அவர்களின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டமானது இராணுவத் தளபதியின் கஸ்டப்பிரதேசங்களில் வாழும் வறிய மக்களுக்கு வீட்டு வசதியனை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்படுகின்றது.
விங்கணக்குளம் சின்னாதப்பன் பகுதியில் வசிக்கும் திருமதி எஸ். குமுதினியின் என்பவரின் குடும்பம் எதிர்கொண்டுள்ள அவல நிலைமைகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து 561 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்எம்பிஎஸ்பி ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் படி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 16 வது இலங்கை சிங்கப் படையின் மனிதவளம் மற்றும் , பொறியியல் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் படைப்பிரிவு தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க சமூக சேவகரான திரு. அஜித் பி ரம்புக்கான அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட நிதி உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துணுவில இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதோடு 561 வது பிரிகேட் தளபதி , நெடுங்கேணி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவகர், சமூர்த்தி அதிகாரி , 16 வது இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.