Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2021 16:00:43 Hours

அனுராதபுரத்திலுள்ள புகழ்பெற்ற போர் வீரர் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவின் சிலைக்கு முன்பாக நினைவஞ்சலி

இலங்கை இராணுவ வரலாற்றில் புகழ்பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 29 வது நினைவு தினத்தையிட்டு அனுராதபுரம் நகர மத்தியிலுள்ள அவரது சிலைக்கு 08 ஓகஸ்ட் 2021 அன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு குடும்பதாருடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், அராலித்துறையில் 08 ஓகஸ்ட் 1992 அ்னறு புலிகளின் குண்டு தாக்குதலுக்கு இலக்காகி பத்து போர் வீரர்கள் உயிரிழந்திருந்திருந்தனர். இதன்போது மத வழிபாடுகளின் பின்னர் நினைவுத் தூபிக்கு மலர் மாலைகள் அணிவித்தல் மற்றும் இராணுவ மரியாதை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 21 வது படைப்பிரிவின் சிப்பாய்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கவசப் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட அவர்களுடன், 21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டீஜி பண்டார, கவசப் படையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் முப்படையினர்களும் கலந்துகொண்டனர்.