Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2021 22:00:43 Hours

அயகம – கலவான பாதை திருத்தப் பணியில் 12 வது களப் பொறியியலாளர்கள்

இராணுவ தளபதியினால் தலைமை கள பொறியியலாளர் மற்றும் பொறியியல் படைப்பிரிவு தளபதி ஆகியோருக்கு வழங்கிய ஆலோசணையின்படி 12 வது கள பொறியியலாளர் படையணியின் படையினர் தற்போதுய 100,000 கிமீ கிராம வீதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அயகம - கலவன பிரதான பிரதான வீதியின் 16.5 கிமீ நீளம் முழுமையாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசணைகளுக்கு அமைவாக ரூபா 209 மில்லின் மதிப்பீட்டிலான திட்டத்தின் முதலாம் கட்டம் 2020 ஆகஸ்ட் மாதம் கள பொறியியலாளர் பிரிகேட்டின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் 2021 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது

குன்றும் குழியுமாக பாழடைந்த நிலையில் பொதுமக்களுக்கு பெரும் போக்குவரத்து சிரமமாக காணப்பட்ட இவ்வீதி ஜனாதிபதியின் 'கம சமக பிலிசந்தரக்' நிகழ்ச்சியின் ஊடாக வீதி மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.