13th August 2021 16:00:33 Hours
வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ள நன்கொடைகளை கொண்டு தந்திரிமலை பகுதியிலுள்ள கஸ்ட பிரதேச கிராமங்களில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்கான பொது மக்களின் வீடுகளை மீள் திருத்தம் செய்துகொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் ஹிமல் குருகே அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய வீட்டை நிர்மாணிக்க எரந்த மல்தெனிய, நதீரா ஜெயசிங்க, லலிந்து சமரவீர, ஜனக பண்டார, பெத்தும் ருஹுனகே மற்றும் அஜிந்த குணசேகர ஆகியோரால் வழங்கப்பட்ட நிதியுதவி உதவியை கொண்டு. திங்கட்கிழமை (9) இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
திட்டத்தின் பயனாளியும் மூன்று பிள்ளைகளின் தந்தையான திரு சிசிர குமார குடும்பம் இல்லாதபோது அந்த பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் அவரது வீட்டை முற்றிலும் சேதப்படுத்தியிருந்த நிலையில் அவரது குடும்பத்தார் மரணத்திலிருந்து தப்பியுள்ளனர்.
திரு பிரசாத் லொக்கு பாலசூரிய அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைமை பௌத்த தேரரும் தந்திரிமலை ராஜமஹா விகாரையின் தலைமைப் தேரருமான வண பரவஹெர சந்திரரதன தேரரினால் குறித்த வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. நிகழ்வு உரிய சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய நடாத்தப்பட்டது