Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2021 21:00:08 Hours

இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி கடமை ஆரம்பிப்பு

கலாஓய இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் 9 ஆவது தளபதியாக பிரிகேடியர் வசந்த லியனவடுகே மத ஆசிர்வாதங்கள் மற்றும் இராணுவ முறைப்படி புதன்கிழமை (11), தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணுவத் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி பணியாளர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். நிகழ்வில் இராணுவத் தொழிற்பயிற்சி நிலையத்தின் படையினரால் பாதுகாவல் அறிக்ைகயிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் நிகழ்வை குறிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது.

பின்னர், பிரிகேடியர் வசந்த லியனவடுகே சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் 'செத் பிரீத்' பாராயணங்களுக்கு மத்தியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரை மற்றும் தேனீர் விருந்துபசாரம் என்பவற்றிலும் அவர் கலந்துக் கொண்டார்.

தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.