Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2021 19:00:08 Hours

2 வது கட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தில் 350 மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

ஆசிரிய சமூகத்திற்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டுதலில் வெள்ளிக்கிழமை (13) இராணுவத் நோய் தடுப்பு பணிப்பகத்தின் மருத்துவக் குழு மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) சுமார் 350 ஆசிரியர் பயிலுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாம் மாத்திரையினை வழங்கினர். இது நாட்டின் ஆசிரியர்களின் தரம், சமத்துவம் மற்றும் பொது கல்வி வளர்ச்சிக்கு தலைமைத்துவத்தை வழங்குகிற மிக முக்கியமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு முன்பு இராணுவ மருத்துவக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்தப் புதிய திட்டத்தின் கீழ் தடுப்பூசியை பெற்றவர்களிடமிருந்து இராணுவ வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் அடங்கிய இராணுவ மருத்துவ குழுவினர் பாராட்டுகளைப் பெற்றனர். அதன்படி, சுகாதார அமைச்சு, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளுடன் கலந்தாலோசித்தபடி கல்வி சார் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடரும்.

தேசிய கல்வி நிறுவனம் கல்வி முகாமையாளர்கள், ஆசிரியர் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, பாடசாலை பாடத்திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் கல்வி கொள்கை ஆராய்ச்சி நடத்துதல் ஆகியவற்றுக்கு பொறுப்பானது, மத்திய அமைச்சிக்கும் கல்வி அமைச்சருக்கும் கற்பித்தல் தொகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட விடயங்களிலும் நாட்டில் கல்வித் தொகுதிகள் மற்றும் பிற தொடர்புடைய கல்விப் பயிற்சித் திட்டங்கள் தொடர்பிலும் ஆலோசனை வழங்க பிரத்தியேகமாக கட்டளையிடப்பட்டுள்ளது.