Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2021 11:00:33 Hours

ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் அலுவலகத்தை பொறுபேற்றார்

இராணுவ தலைமையகத்தின் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தின் 26 வது பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் ஜனக விமலரத்ன கொஹூவலையிலுள்ள அலுவலகத்தை திங்கட்கிழமை (09) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு உரிய சுகாதர ஒழுங்விதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டது.

மத அனுட்டானங்களை தொடர்ந்து பிரிகேடியர் ஜனக விமலரத்ன உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு அலுவலகத்தை பொறுப்பேற்றுக் கொண்டதோடு, பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நியமனம் முன்னதாக மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா வகித்தார். புதிய பணிப்பாளர் இதற்கு முன்னதாக கிழக்கிலுள்ள 241 வது பிரிகேட் தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.