Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2021 11:42:39 Hours

புதிதாக நியமனம் பெற்ற நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு இராணுவ தளபதி மரியாதை நிமித்தம் அழைப்பு

புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மேதகு மிஷெல் எப்பல்டொன் இன்று (13) காலை அவரது நற்சான்று பத்திரத்தை அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமான அழைப்பை ஏற்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இராணுவ தலைமையகத்திற்கு வருகைத் தந்த அவரை தளபதியின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் முன்பாக இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி அவர்களினால் உயர்ஸ்தானிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து தளபதியின் அலுவலகத்திற்கு வருகைத் தந்த இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மேதகு மிஷெல் எப்பல்டொன் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.

சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள், இராணுவ அமைப்புகள் மற்றும் இலங்கையின் முப்படையினருக்கான பலதரப்பட்ட பயிற்சிகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

உயர்ஸதானிகளுக்கு நன்றிகளை கூறிக்கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்திற்கு பக்கபலமாக செயற்பட்டதை போன்று எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கலந்துரையாடலின் நிறைவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மேதகு மிஷெல் எப்பல்டொன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கியதுடன் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் புறப்படுவதற்கு முன்னதாக கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் இலங்கையில் கொவிட் - 19 கட்டுப்பாட்டு நிலவரம் தொடர்பிலும் கேட்டறிந்துக் கொண்டார்.

அதிமேதகு மிஷெல் எப்பல்டொன் மைக்கேல் ஆப்பிள்டன் இராணுவத் தலைமையகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இராணுவ தளபதியின் அலுவலகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார் உயர்ஸ்தானிகருடன் மற்றுமொரு சிரேஸ்ட அதிகாரியும் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.