Header

Sri Lanka Army

Defender of the Nation

07th August 2021 21:40:27 Hours

சுய தொழில் வாய்ப்புக்களை முன்னெடுப்பதற்காக முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினால் நிதி உதவி

உலகில் ஒருபோதும் இல்லாதவாறு இலங்கை இராணுவம் நல்லெண்ண அடிப்படையில் 15 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சகோதரத்துவத்துடன் நட்புக்கரம் நீட்டியது. சிறையிலிருந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் நாட்டின் ஏனைய மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதோடு சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக அமைதியாக வாழ்க்கையை கொண்டுச் செல்வதற்கும் நிதி உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட் – 19 பரவல் தொடர்பான மீளாய்விற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது அங்கு வழமைக்கு மாறான மற்றும் சிறப்பான நடவடிக்கையொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் இன்று காலை (7) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலத்துகொண்ட கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் மனித சமூதாயத்திற்கு எதிராக பல கொடூரமான குற்றச் செயல்களை அரங்கேற்றிய தரப்பினரால் முன்னாள் போராளிகள் ஆயுதங்களை வழங்கி எவ்வாறு தவறாக வழிநடத்தபட்டார்கள் என்பது குறித்து கேட்டறிந்துகொண்டதோடு, பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டவர்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக 100,000 ரூபாயினையும் வழங்கி வைத்தார். சமூக திட்டங்கள் மீது ஆர்வம் கொண்டவரும் சுய வருமானம் ஈட்டும் வழிவகைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகவும் கொண்டு திரு வாமதேவன் தியாகேந்திரன் அவர்களுடன் இணைந்து யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தோடு யாழ்ப்பாணத்தின் மாவட்ட செயலாளர் திரு கணபதி பிள்ளை மகேஷனும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு அந்த ஊக்கத்தொகைகளை வழங்கி வைத்த பின்னர் அவர்களுடன் கலந்துரையாடிய ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது எதிர்பாராத வகையில் முன்னெக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தலின் பேரில் கொலைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டீர்கள். அதனால் நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. அத்தோடு குண்டு வெடிப்புகள், சமூக படுகொலைகள், பொது சொத்து அழிப்புக்கள், கொலைகள் போன்ற கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன. சிங்கள மற்றும் உங்களது தமிழ் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளை கொலை செய்த பிரபாகரன் மற்றும் அவரது குழுக்கள் தங்களை "சுதந்திரப் போராளிகள்" என அடையாளப்படுத்திக் கொண்டதால் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டீர்கள். தற்போது அந்த மோசமான குற்றச் செயல்கள் , இரத்தக் கொதிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான வரலாறுகளை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனால் உங்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பயங்கரவாத இயக்கத்தில் இருந்த போது உங்களில் சிலர் எங்கள் இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பீர்கள் அதனால் பலர் கை மற்றும் கால்களை இழந்தனர் இருப்பினும் இருப்பினும் நாங்கள் உங்கள் மீது வெறுப்பு பார்வையை காட்டவில்லை என குறுப்பிட்டார்.

"எனவே, ஜனாதிபதி பொது மன்னிப்புக்குப் பின்னர் நீங்கள் வன்முறையிலிருந்து விலகி, இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கும் மற்றும் மதிப்பிற்குரிய குடிமக்களாக அமைதியான வாழ்க்கையை தொடர தயாராக உள்ளீர்கள் என்பதை உலகிற்கு காண்பிக்க வேண்டியது அவசிய வகையிலேயே உங்களுக்கு மத மற்றும் கலாசார அடிப்படையில் நாங்கள் உங்களை எங்கள் சொந்த சகோதரர்களாக கருதுகிறோம். அதன்படி புனர்வாழ்வளிக்கப்பட்ட உங்களது வாழ்வாதாரங்கள் மற்றும் எதிர்காலத்தில் உங்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல் ஆகியன மூலம் முன்னேற்றத்திற்கு எங்களது அதிகபட்ச ஆதரவை வழங்க நாங்கள் விரும்புகிறோம், ” என்றும் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மேற்படி ஊக்குவிப்பு தொகையினை வழங்கும் நிகழ்வின் நிறைவில் ஜெனரல் சவேந்திர சில்வா திட்டத்தின் ஆதரவாளரான திரு வாமதேவன் தியாகேந்திரனுக்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதோடு ஓரு சிறப்பு நினைவுச்சின்னத்தையும் வழங்கினார். மேலும் பயனாளிகளுடன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் தளபதி நேரம் ஒதுக்கிக்கொண்டார். அவர்களின் எதிர்காலத் திட்டங்கள், வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் அவர்களின் குடும்ப நல்வாழ்வு போன்ற அனைத்து திட்டங்களிலும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். கடுமையான சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வின் இறுதி கட்டத்தில் இராணுவ இராணுவத் தளபதியிடம் பேசுவதில் முன்னாள் போராளிகள் மிகுந்த ஆரவம் காட்டியிருந்தமை சிறப்பமசமாகும்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு இந்த நிகழ்வின் போது தளபதியின் வருகையினை குறிக்கும் வகையில் சிறப்பு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.

பலாலி விமானப்படை தளத்திற்கு வருகை தந்த பிரதம விருந்தினருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதன் பின்னர் யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல, 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹெரான் பீரிஸ் , 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன, பிரிகேட் தளபதிகள் மற்றும் சில முப்படை அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்