Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2021 23:37:18 Hours

400 கட்டில்களுடன் எல்பிட்டியில் நிறுவப்பட்ட இடைநிலை சிகிச்சை மையத்திற்கு கொவிட் - 19 பரவல் தடுப்பு செயலணியின் தலைவர் விஜயம்

எல்பிட்டிய இகல்கந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஆடைச் தொழிற்சாலை படையினரால் இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைக்கப்பட்டு புதன்கிழமை (11) எல்பிட்டிய ஆதார வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் மேற்படி 400 கட்டில்கள் மற்றும் நவீன வைத்திய உபகரணங்களுடன் கூடியதாக நிறுவப்பட்ட விஷேட இடைநிலை சிகிச்சை மையம் இன்று மதியம் (12) மேற்பார்வை செய்யப்பட்டது. இதன்போது தளபதி அவர் புதிய இடைநிலை சிகிச்சை நிலையத்தின் உட்புறம், சுகாதார வசதிகளை நெருக்கமாக ஆய்வு செய்தார் மற்றும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளுடன் உரையாடினார்.

61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேடின் 14 வது கெமுனு ஹேவா (14 GW) மற்றும் முதலாவது பொறியியல் சேவை படையணி சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் திட்டத்தை நிறைவு செய்தனர். இதன் கட்டுமாண பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை தென் மாகாண ஆளுநர் கலாநிதி வில்லி கமகே அவர்களால் சில வாரங்களுக்குள் வழங்கப்பட்டமையால் திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க உதவியது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்களின் அசாதாரண அதிகரிப்பின் காரணமாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, கட்டில்களின் எண்ணிக்கையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, மற்றும் 61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு, எல்பிட்டிய ஆதார வைத்தியச்சாலை பணிப்பாளர் வைத்தியர் அருண அபேவிக்ரம, மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகள் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றினர்.