Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2021 19:16:47 Hours

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளிகளுக்கு 100 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் இரத்த தானம்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடுமையான இரத்தப் பற்றாக்குறை குறித்த அவசியம் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி 68 வது படைப்பிரிவின் சிப்பாய்கள் 68 படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் இரத்த தான செயற்றிட்டத்தை ஆரம்பித்து கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அவசரமாக வழங்குவதற்காக இரத்தம் வியாழக்கிழமை (9) சேகரிக்கப்பட்டது.

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இந்த வைத்தியசாலையின் இரத்த வங்கி சேகரிக்கப்பட்டிருந்த இரத்தத்தின் அளவு சடுதியாக குறைவடைந்து வருவதால் அதிகாரிகள் உள்ளடங்களாக 107 சிப்பாய்கள் இரத்ததானம் வழங்கினர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் ஊழியர்கள் இணைந்து இந்த ஏற்பாட்டில் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய மற்றும் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார ஆகியோரின் வழிகாட்டலில், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கபட்டது.

முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு இரத்தம் அவசரமாகத் தேவைப்படுவதால், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோரால் இராணுவத்தினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று படையினரால் மேற்படி இரத்ததானம் வழங்கப்பட்டது.