Header

Sri Lanka Army

Defender of the Nation

12th August 2021 13:39:08 Hours

இராணுவ நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேல் மாகாணத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில்

முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் இராணுவத்தின் முதல் மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி (SLAMC), தடுப்பு மருந்து மற்றும் மன ஆரோக்கியம் பணிப்பகம் ,போக்குவரத்து பணிப்பகம் , இலங்கை சமிஞ்சைப் படையணி இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி ஆகியன இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது. கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர், பிரிகேடியர் சந்தன அரங்கல அவர்களின் ஒருங்கிணைப்பில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் இன்று காலை (12) இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

பத்து நடமாடும் தடுப்பூசி வழங்கல் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றும் இந்த திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சேவையினை கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் பதிவு செய்துக் கொண்டவர்களுக்கு பெற்றுக் கொள்வதற்கு முடியும். தொடர்பு இலக்கம் 1906 அல்லது 0112860002. குறித்த இடத்திற்கு வருகை தந்த ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை குறுகிய காலத்தில் ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோல வரவேற்றார். குறித்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட சிரேஸ்ட அதிகாரிகளின் அறிமுகத்தினை தொடர்ந்து குறித்த வாகனங்களை பார்வையிட்டார். அத்தோடு வைத்திய ஊழியர்களுடன் சில எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.

தாதிகள்கள், மருத்துவ உதவியாளர்கள், தகவல் உள்ளீட்டு இயக்குனர் மற்றும் சாரதியினை கொண்ட தலா வாகனங்கள் அதிக மக்கள் தொகை கொண்ட தெமட்டகொட பகுதி (1 வாகனம்), கொழும்பு 15, மோதரை பகுதி (3 வாகனங்கள்), கங்காராம மாவத்தை மட்டக்குளிய பகுதி (1 வாகனம்), கொழும்பு 14 - கிராண்ட்பாஸ் பகுதி (3 வாகனங்கள்), கொழும்பு 15, புளூமெண்டல் சாலை பகுதி (2 வாகனங்கள்) மற்றும் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தகவலின் அடிப்படையில் கலந்தாலோசித்து தேவையான இடங்களுக்கு பின்னர் அனுப்பப்படும். ஒரு மருத்துவ அதிகாரியுடன் ஆம்புலன்ஸ் வண்டி செயல்பாடுகள் முழுவதும் செயல்முறையுடன் காணப்படும்.

ஜனாதிபதி உத்தரவின் பேரில், இராணுவ வைத்திய பணியாளர்களுக்கு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருந்த ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒப்படைக்கப்பட்டது, இந்த ஆண்டு அவர்கள் மேல் மாகாணத்தில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, மற்றும் பிற இடங்களில் தீவை ஆதரிப்பதற்கும் துரிதப்படுத்துவதற்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள், பிற தொழில் வல்லுநர்கள் மற்றும் அரச உதவி மருத்துவர்களின் அலுவலகங்களுடன் இணைந்து பரந்த அளவிலான தடுப்பூசி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமா ஜெனரல் சவேந்திர சில்வா, அவர்களின் வழிகாட்டுதல்களின்படி தொடங்கப்பட்ட இப்புதிய திட்டம் எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோல 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன இராணுவ பொது சுகாதார பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ, தடுப்பு மருந்து மற்றும் மன ஆரோக்கியம் பணிப்பாளர் கர்னல் சவீன் செமகே, ஆகியோர் இராணுவ தலைமையகத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கலில் பங்குபற்றினர்.