Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2021 13:45:47 Hours

7 வது கெமுனு ஹேவா மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் முல்லைத்தீவில் தொற்று நீக்கம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 681 வது பிரிகேட்டின் 7 வது கெமுனு ஹேவா மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் தொற்று நீக்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

அதன்படி 7 வது கெமுனு ஹேவா படையினர் வல்லிபுனம் கிராம சேவையாளர் பிரிவு, பாரதி மகா வித்தியாலயம், 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை சுதந்திரபுரம் கிராம சேவையாளர் காரியாலயம், உடையார்கட்டு வடக்கு கிராம சேவை பிரிவு காரியாலயம், சுதந்திரபுரம் மற்றும் உடையார்க்கட்டு வடக்கு கூட்டுறவுக் கடைகள் என்பன தொற்று நீக்கப்பட்டன.

68 வது படைப்பிரிவு தளபதி மற்றும் 681 வது பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.