Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2021 18:30:11 Hours

60 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முன்வருமாறு கொவிட் – 19 தடுப்பு செயலணி கோரிக்கை

மேல் மாகாணத்தில் கொவிட் – 19 தடுப்பூசிகளின் முதல் மாத்திரையைக் கூட இதுவரையில் பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டுமென கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தரவு கட்டமைப்பை பயன்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திகதி, இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் குறுஞ்செய்தி ஊடாக அனுப்பி வைக்கப்படும்.

மேல் மாகாண மாவட்ட தடுப்பூசி நிலையங்கள் பற்றிய விபரங்கள் வருமாறு

கொழும்பு மாவட்டம் : இராணுவ வைத்தியசாலை, ஓகஸ்ட் 11 – 13

கம்பஹா மாவட்டம் : கம்பஹா மாவட்ட வைத்தியசாலை, ஓகஸ்ட் 12 - 14

களுத்துறை மாவட்டம்: களுத்துறை வைத்தியசாலை, ஓகஸ்ட் 12

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரேனும் இதுவரையில் தடுப்பூசிகளை பெறுவதற்கான விபரங்களை இதுவரை வழங்கவில்லை என்றாலும் அவர்கள் நேரடியாக கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தை 1906 என்ற கட்டணமில்லா தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். (முடிவு)