Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2021 12:17:46 Hours

பாடசாலையின் விளையாட்டு அம்சங்களில் மேம்பாடு

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய படையினரால் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை பொறியியல் படையினரால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை வளாகங்களை மறுசீரமைக்கும் திட்டத்துக்கமைய பாடசாலை விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பார்வையாளர் மண்டபங்களை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி அனுராதபுரம் மத்திய கல்லூரியின் சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் செயற்கை தரை கட்டுமானங்கள், புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்யப்பட்டு பொறியியல் படையினரால் பாடசாலை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை (3) கையளிக்கப்பட்டது.

அதேபோல் , விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்ற மேலும் 3 பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள், சுகாதாரத் வசதிகள் என்பன 12 வது (தொ) பொறியியல் சேவைப் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மேலும் 2 வருடங்களாக விளையாட்டுக்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 7 பாடசாலைகளின் அடிப்படை வசதிகளும் மேம்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக மறுசீரமைப்பு பணிகளுக்கு அவசியமான நிதியினை கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டுகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக பொறுப்பேற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு மேற்படி திட்டத்தின் கீழான இரும்பு வேலைகளுக்கு 2.9 மில்லியன் ரூபாயும் கட்டுமான பணிகளுக்குக்கு 6 மில்லியன் ரூபாயும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை களப் பொறியாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவின் வழிகாட்டுதலின் கீழ், பொறியாளர் பிரிகேட்டின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்த ஆகியோர் கட்டுமானங்களில் ஈடுபட்டுள்ள தமது படையினரை மேற்பார்வை செய்தனர்.