08th August 2021 13:31:57 Hours
இராணுவத் தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான ‘துரு மிதுரு - நவ ரடக்’ திட்டத்திற்கமைய 56 வது படைப்பிரிவு தலைமையகத்தின் அருகில் ஏ -9 வீதியின் இருபுறங்களிலிலும் மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் வியாழக்கிழமை (29) ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டம் 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவிலவின் அறிவுறுத்தலுக்கமைய அத்துருகிரிய பகுதியிலுள்ள வன பசுமை சங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
பசுமை வனச் சங்கத்தின் நிர்வாக பணிப்பாளர் திரு ஹரீந்திர யசஸ் சேரசிங்க 400 மரக்கன்றுகளை இத்திட்டத்திற்கான அன்பளிப்புச் செய்தார். அத்தோடு எட்னா தனியார் நிறுவனத்தின் முகாமையாளர் திரு. கஜபா டி சில்வா மற்றும் 56 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூகேஏஸ் பிரியந்தலால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.