Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2021 14:30:33 Hours

கஜபா படையணியின் ஸ்தாபகர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவுக்கு நினைவஞ்சலி

21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, கஜபா படையணியின் நிலையத் தளபதி மேஜர் பிரிகேடியர் தினேஸ் உடுகம உட்பட சில பதவி நிலை அதிகாரிகள் மற்றும் படையணி சார்ஜண் மேஜருடன் இணைந்து சாலியபுர படையணி தலைமையகதிலுள்ள கஜபா படையணியின் ஸ்தாபகர் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களின் உருவச்சிலைக்கு அவரது 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (8) மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு அராலிதுறையில் உயர் தியாகம் செய்த கேணல் வைஎம் பிலிபன அவர்களுக்கும் அவரோடு இணைந்தவர்களுக்கும் கஜபா படையணியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கஜபா படையணி மற்றும் விசேட படைகளின் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய இராணுவத்தின் முக்கிய புள்ளியின் சொந்த ஊரான கொண்ட கிரிபத்கொடையிலுள்ள சிலைக்கு 12 வது கஜபா படையினரால் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் லால் விஜேதுங்க, இராணுவ தலைமையகத்தின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் ஜூட் பெரேரா மற்றும் 12 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர் மாகாவிட்ட ஆகியோராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.