Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2021 09:45:15 Hours

புகழ்பெற்ற போர் வீரர் டென்சில் கொப்பேகடுவவின் 29 வது நினைவு தினம் இன்று (8)

இராணுவத்தில் உருவான மிகச்சிறந்த போர் வீரர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஏனைய ஒன்பது போர் வீரர்களினதும் 29 வது நினைவு தின நிகழ்வுகள் இன்று (8) அவரது படையணியான இலங்கை இராணுவ கவசப் படையணியின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் அனுட்டிக்கப்படவுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் அவருடன் வந்த அணியின் மேஜர் ஜெனரல் விஜயா விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜெயமஹா, லெப்டினன்ட் கேணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜீஎன் அரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பிலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நலின் டீ அல்விஸ், லெப்டினன் கொமாண்டர் சீ.பீ. விஜேபுர மற்றும் சாதாரண சிப்பாய் டபிள்யூ. ஜே. விக்கிரமசிங்க ஆகியோர் புலிகளின் கன்னிவெடிகளில் சிக்கி யாழ்ப்பாணம் அராலித்துறை பகுதியில் 8 ஓகஸ்ட் 2021 அன்று உயிர் துறந்னர்.