Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 19:55:50 Hours

தடுப்பூசி வழங்கள் தரவுகளை தரவேற்றும் பணிகளில் சமிக்ஞை படையினர் மும்முரம்

பாதுகப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் கொவிட் – 19 தடுப்பூசி தொகுதிகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பிலான தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை மேம்படுத்தும் பணிகளில் 11 வது இலங்கை சமிக்ஞை படையணியின் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி மேல் மாகாணத்தில் இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி மையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் பணிகளை வைத்திய குழுக்களின் உதவியுடன் 24 மணி நேரமும் தரவேற்றம் செய்யப்படுகின்றன. மேற்படி தரவுகளை இணையத்தில் தரவேற்றம் செய்வதற்காக இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் மற்றும் தகவல் தொழில்நுட் பணிப்பாளர் பிரிகேடியர் கே.சீ.பிரதாபசிங்க, 11 வது சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.டீ.கொத்தலாவல, சிப்பாய்களுடன் இணைந்து தேசத்தின் முன்னேற்றத்தை கருதி இந்த பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.