Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 19:52:22 Hours

தலதா மாளிகையின் பெரஹெராவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி ஆராய்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியகனே அவர்கள் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே , பிரிகேட் தளபதிகள் சகோதரத் துறைகளின் கட்டளை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து திங்கட்கிழமை (02) குண்டசாலையிலுள்ள 11 வது படைப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்ட சந்திப்பின் போது வரவிருக்கும் கண்டி தலதா மாளிகையின் பெரஹெரா நிகழ்வின் போதான பாதுகாப்புச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது எசல பெரஹெராவின் போது சுகாதார நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.