Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 19:58:26 Hours

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்திருக்கும் இராணுவ தலைமையகத்தின் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் 21 வது பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்க திங்கட்கிழமை (02) அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக நியமனம் பெற்ற பணிப்பாளர் மத வழிபாடுகளுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்று கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கைசாத்திட்டார்.

இதன்போது பணிப்பகத்திலுள்ள பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, மேற்படி பணிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அண்மையில் வழங்கள் கட்டளை தளபதியாக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த புதிய நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்னர் பிரிகேடியர் ஹத்துருசிங்க, கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி அதிகாரியாக நியமனம் வகித்தார்.