Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2021 06:12:45 Hours

நடமாடும் தடுப்பூசி மையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன-கொவிட் - 19 தடுப்பு செயலணியின் தலைவர்

கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் மற்றுமொரு மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் வைத்திய நிபுணர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் பங்கேற்புடன் ராஜகிரியவில் இன்று (05) நடைபெற்றதுடன் இக்கூட்டத்தில் கொவிட் – 19 நோயாளிகளின் அதிகரிப்பு, தற்போதைய நிலவரம், மரணங்கள் பதிவாகுதல் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா, தொற்றாளர் மற்றும் மரண எண்ணிக்கை அதிகரிப்பு என்பன தொடர்பிலான தற்போதைய நிலவரங்களை விளக்கினார். வெள்ளிக்கிழமை (6) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி செயலணியின் விஷேட கூட்டத்தில், எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகள் மற்றும் பிற இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளையும் அவர் சமர்ப்பித்தார். நிலைமையக் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து வைத்திய நிபுணர்களுடன் ஆலோசணைகளை பெற்றுக்கொண்ட பின்னர் தீர்மானங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தற்போதும் முழுமையாக நீக்கப்படவில்லை என்றும் அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளின் அனுமதியுடன் தொழிலுக்குச் செல்ல முடியும் என்பதுடன் எதிர்ப்பு மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகள் காரணமாக தொற்று பரவல் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும், பொதுமக்கள் முகமூடி அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கழுவுதல் போன்ற அடிப்படை சுகாதார செயற்பாடுகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, நேற்று அனுராதபுரத்தில் ஒரு திருமண நிகழ்வில் 350 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக அறிய முடிந்ததுடன், 50 – 60 இடைப்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். மறுப்புறத்தில் கொவிட் பொருட்படுத்தாமல் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு நாம் நன்றி கூற வேண்டும். எதிர்வரும் நாட்களில் அவர்களது பணிகள் மேலும் கடினமாக அமையக்கூடும். இந்த தருணத்தில் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை நிறுவினாலும் அவற்றுக்கான ஒட்சிசன் தேவைகளை வழங்குவது சிக்கலாவுள்ளது. மக்கள் அச்சமடைந்து வைத்தியசாலைகளுக்குள் நுழைய முற்படுத்துவதை மட்டுப்படுத்துகிறார்கள் நாங்கள் குறித்த பணிகளில் ஈடுபடும் வைத்திய ஊழியர்களை நன்றாக கவனித்துக்கொள்வது அவசியம் என்றுதெரிவித்தார்.

மேலும் சிறிய தொகையிலானவர்கள் அச்சுறுத்தலான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளார் என்றபோதிலும் , தற்போது இராணுவ வைத்தியசாலையில் வெளிநாடுகளுக்குச் செல்வோர், வெளிநாடுகளில் கல்விகற்கும் மாணவர்கள், போன்ற பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதனைடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்று பரவல் நிலவரம் மற்றும் உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற நிலைமை என்பன தொடர்பிலும் விளக்கமளித்தார்.