Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 19:48:34 Hours

வனப் பகுதிக்குள் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 121 வது பிரிகேட் சிப்பாய்களால் செவ்வாய்க்கிழமை (3) மொனராகலை ஹுலந்தாவ வனப்பகுதிக்குள் சடுதியாக பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

படையினர் துரிதமாக தீப்பரவல் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து தீப்பரவலை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

12 வது படைபிரிவு தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய 121 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.