Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 22:47:13 Hours

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' மாலைதீவு இந்தியா மற்றும் இலங்கையின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்புடன் இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (4) ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா முப்படை அதிகாரிகள் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த முத்தரப்பு கடற்பரப்பில் பிராந்திய கடல்சார் நடவடிக்கைகளின் பாதுகாப்பு, கடத்தல் தடுப்பு, கடற் கொள்ளை, அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேன்மேலும் மேம்படுத்துவதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பு, கடல்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் ஆகியவற்றின் அதிக கவனம் செலுத்துதல் தொடர்பாக கலந்தாலோசித்தனர்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான மாநாடாக கொழும்பு பாதுகாப்பு மாநாடு திகழ்வதுடன் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2011 ஆம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆண்டின் மாநாட்டில் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏற்பாடுகள், சமீபத்திய தொழில்நுட்பத்தின் பயன்பாடு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை போன்றவையும் விவாதிக்கப்பட்டன.

இணையவழி தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் பிராந்தியத்தின் மேம்பாடு மற்றும் முத்தரப்பு கூட்டு நடவடிக்கைகளுக்கான முப்படையினரின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக்கூடிய நாடுகளிடையே கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா , கடற்படை பிரதி பதவி நிலை பிரதானி ரியர் அட்மிரல் வை . என் ஜயரத்ன, விமானப்படை பதவி நிலை பிரதானி எயார் வைஸ் மார்ஷல் ஏ.பி பயோ, இலங்கை கடசார் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் G.E.W.M.A.N ஏகநாயக்க ,இலங்கை கடற்படை நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பி.எஸ்.மஹாவிதாரன, இலங்கை தெற்கு விமானப்படை தளபதி ஏயர் வைஸ் மார்ஷல் ஆர்.ஏ.யு.பி ராஜபக்ஷ, இலங்கை இராணுவ தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் நாயகம் ஏயார் கொமடோர் ஏஎஸ் விதான, இலங்கை இராணுவ பொது நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் சாந்த ரணவீர, இணையவழி தொழில்நுட்ப மாநாட்டின் செயலாளர் கேணல் பிஎஸ் சுபத் சஞ்சீவ, பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதி மேஜர் என்.கே.எச். நேஹின்ன, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெற்காசிய& தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு பிரிவு பணிப்பாளர் நாயகம் பிரதிநிதி திருமதி சாமரி ரோட்ரிகோ, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெற்காசிய& தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் திரு மகேஷ் பிரேமதிலக, இலங்கை பொலிஸ் குற்றவியல் பிரிவு மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபில்யுஎம் சமரகோன் பண்டா , இலங்கை பொலிஸ் பிரதி பணிப்பாளர் /அரச புலனாய்வு சேவை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிஏபிஎன் பள்ளேஆராச்சி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.