Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2021 21:13:59 Hours

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் இராணுவ தலைமையகத்தின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நடவடிக்கை அறை திறந்து வைப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தினை செவ்வாய்க்கிழமை (3) மேற்கொண்ட முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால் இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தினால் நிறுவப்பட்ட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சர்வதேச தரத்திலான புதிய நடவடிக்கை அறை திறந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான, ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மனிதான நடவடிக்கையின் போதான ஒவ்வொரு படைப்பிரிவினருக்குமான நினைவுச் சின்னங்கள் அடங்கிய தொகுப்புக்களையும் பார்வையிட்டார். அதனையடுத்து புதிய நடவடிக்கை அறைக்குச் சென்ற புதிய நடவடிக்கை அறையினை திறந்து வைத்த பின்னர் அதன் செயல்பாட்டு முறைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய நிறுவப்பட்டுள்ள குறித்த நடவடிக்கை அறையில், நவீன சமிக்ஞை பிரிவு, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் உபகரண பிரிவு என்பன உள்ளடங்கியுள்ளன. இதன் மூலம் ஏதேனும் அவசரநிலை அல்லது இயற்கை அனர்த்தங்களின் போது அனைத்து காலாட்படையிரையும் சொற்ப நேரத்திற்குள் வரிசைபடுத்தும் இயலுமை காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

பின்னர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் புதிய நடவடிக்கை அறையின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் தொகுக்கப்பட்ட முன்மொழிவுகளுடனான விளக்கங்களை இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளுடமிருந்து பெற்றுக்கொண்டார். இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

அதேநேரம், ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவ அதிகாரிகள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களது விஜயத்தின் போது வருகை தந்திருந்த ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலாளர் டொக்டர் பீ.பீ.ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன ஆகியோரை கைலாகு கொடுத்து புதிய நடவடிக்கை குழுவுக்கு அருகிலுள்ள திட்டமிடல் அறைக்குச் அழைத்துச் சென்றிருந்ததோடு இணை நடவடிக்கை தொடர்பாக கருத்துகளையும் பரிமாற்றிக்கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்ப கட்டமாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை பிரிகேடியர் சாந்த ரணவீர வரவேற்றதை அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வருகைக்கு முன்பாகவே, இராணுவ பதவி நிலை பிரதானி , இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் வைபவ இடத்திற்கு வருகை தந்தனர்.

மேலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலாளர் டொக்டர் பீ.பீ.ஜயசுந்தர, ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோர் அங்கு வருகை தந்ததுடன் தங்களது எண்ணங்களை பகிர்ந்துகொண்டதன் பின்னர் இராணுவ தளபதியின் அலுவலகத்திலுள்ள விருந்தினர் பதிவேட்டில் ஜனாதிபதியவர்கள் தனது எண்ணப் பகிர்வுகளை பதிவிட்டார்.