Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2021 18:01:55 Hours

புதிய இராணுவ மற்றும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் முன்னோடி கட்டிடக்கலைஞரான அதிமேதகு ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவிலுள்ள பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் திட்டமிடல் முன்னோடியும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தவருமான முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து இன்று (03) காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

காலை 10.00 மணியளவில் குதிரைப்படையின் அணிவகுப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி வாகனத்தில் இராணுவ தலைமையகத்தின் நுழைவாயிலுக்குள் வருகைத் தந்த முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் இராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

தலைமையகத்தின் பிரதான நுழைவுப் பகுதிக்கு முன்பாக வருகை தந்த பிரதம விருந்தினர் தனது வாகனத்திலிருந்து இறங்கிய அடுத்த கனத்திலேயே ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் அன்போடு வரவேற்பளிக்கப்பட்டதுடன் ஒரு மாதத்திற்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட கஜபா படையணியின் 4 அதிகாரிகள் மற்றும் 96 சிப்பாய்கள், ஜனாதிபதி வர்ண மற்றும் படையணி வர்ணக் குழுக்கள் ஆகியோரினால் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து மிக உயர்வான இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.அதனையடுத்து பிரதம விருந்தினருக்கு அதிகாரிகளுடன் விருந்தினர் மேடையிலிருந்து விசேட மரியாதை செலுத்தப்பட்டது.

பிரதம விருந்தினருக்கான மரியாதையை ஏற்றுக்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரேஸ்ட அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்துகொண்டதோடு, ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவ தலைமையகத்தின் சிரேஸ்ட பதவி நிலை அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். அதிமேதகு ஜனாதிபதியின் விஜயத்தின் போது சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலாளர் டொக்டர் பிபி ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதம விருந்தினரான ஜனாதிபதி கஜபா படையணியின் புகழ்பெற்ற முன்னாள் இராணுவ வீரராவார். அவர் ஓய்வு பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பாக, தனது சில மறக்கமுடியாத நிகழ்வுகளை நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட அதிகாரிகளுடனும் பகிர்ந்துகொண்டார் அதனையடுத்து தனது விருந்தினர் பதிவேட்டிலும் எண்ணப் பகிர்வுகளை குறிப்பிட்டார்.