Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2021 15:58:28 Hours

கண்டி இராணுவ வைத்தியசாலையின் நிர்மாண பணிகள் தொடர்பில் மீளாய்வு

இராணுவ தளபதியின் வழிகாட்டலுக்கமைய மலையக பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்காக 11 வது பிரிவு தலைமையக வளாகத்தை அண்மித்ததாக கண்டியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய இராணுவ வைத்தியசாலை கட்டிடத்தின் நிர்மாண பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே வியாழக்கிழமை (29) 11 வது படைப்பிரிவு தலைமையக தளபதி அவர்களுடன் பல்லேகலயிலுள்ள வளாகத்திற்குச் விஜயம் மேற்கொண்டு நிறைவடையும் தருவாயிலிருக்கும் வைத்தியசாலையின் நிர்மாண பணிகளை பார்வையிட்டனர்.

அதனைடுத்து மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட தளபதிக்கு கடமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் வீடியோ பதிவொன்றும் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னரான மாநாட்டில் தளபதி தனது ஆக்கபூர்வமான எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார்.

மேற்டி புதிய வைத்தியசாலை கட்டிடம் 123 கட்டிடங்களை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையினருக்காக 4 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்தோடு அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினருக்கான வைத்திய ஆலோசணைக்கான அறை, எக்ஸ்ரே பிரிவு, ஈசீஜீ பிரிவி, ஆய்வுக்கூடம், கதிரியக்க ஸ்கேனர் இயந்திரம், மருந்தகம், மருந்து அட்டை பிரிவு, வார்டு பிரதானி அலுவலகம், உளச்சார்பு சிகிச்சை பிரிவு, பற் சிகிச்சை பிரிவு, தாதியர் ஓய்வு அறை, உணவக அறைகள், மகளிர் பிரிவு, விஷேட பிரமுகர்களுக்கான பிரிவு, ஓய்வு அறைகள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கான 4 தனியாக சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட சகல அதிநவீன டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடியதாக வைத்தியசாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அருகிலுள்ள கட்டிடத்தில் வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உடைமாற்று அறை, சத்திரசிகிச்சை அறை, மீட்பு அறை, சலவை பிரிவு, எலும்பு நோய் பிரிவு, நிர்வாக பிரிவு, வைத்திய அதிகாரிகளுக்கான விடுதிகள் உட்பட மேலும் சில பிரிவுகளும் உள்ளன.

அதனைடுத்து பல்லேகலையிலுள்ள செயற்கை ஹொக்கி தரைப்பகுதியின் கட்டமைப்பு பணிகளையும் மேற்பார்வை செய்தார்.