Header

Sri Lanka Army

Defender of the Nation

01st August 2021 18:34:30 Hours

இராணுவத்தினரால் 24 மணிநேரமும் 2 வது அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்

ஊடக அறிக்கை

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைய, இராணுவ இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல பணிப்பகத்தின் வழிகாட்டலுக்கமைய தேசிய தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் சிப்பாய்களால் கொழும்பு விகாரா மகா தேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் ஓகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளிலும் மற்றும் பத்தரமுல்லை “தியத உயன” இராணுவ தடுப்பூசி மையத்தில் ஓகஸ்ட் (02) ஆம் திகதி தொடக்கம் புதன் கிழமை வரையில் அஸ்ட்ரா செனகா (கொவிஷீல்ட்) தடுப்பூசிகளை 24 மணிநேரமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொழும்பு நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை, பனாகொட போதி ராஜாராமயா (இராணுவ விகாரை) மற்றும் வஹெரஹர இராணுவ மருத்துவப் படை முகாம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் ஓகஸ்ட் (01) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரையிலும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய இராணுவ நோய்த் தடுப்பு மற்றும் மனநல சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் சவீன் சேமகே தலைமையிலான இராணுவ வைத்திய குழுக்களினால் தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் ஆரம்பம் முதல் கொவிட் தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவரின் வழிக்காட்டலின் கீழ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், களனி தர்மசோகா வித்யாலயம், கடவத்த கிரில்வல மத்திய கல்லூரி மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரி, தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசியின் முதல் தொகுதிளை பெற்றுக்கொண்ட சகலருக்கும் இரண்டாம் தொகுதியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பத்தரமுல்லையிலுள்ள 24 மணி நேர 'தியாத உயனா' திறந்த தடுப்பூசி நிலையம் திங்கட்கிழமை (2), செவ்வாய்க்கிழமை (3) மற்றும் புதன்கிழமை (4) முதல் தொடர்ச்சியாக செயல்படும். மேலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. (முடிவு)