Header

Sri Lanka Army

Defender of the Nation

29th July 2021 15:00:38 Hours

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்

கொவிட் 19 பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை கிராம சேவையாளர் பிரிவின் 285 தகுதியான குடும்பங்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட மதிய உணவுப் பொதிகள் புதன்கிழமை (28) பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கின் அறிவுறுத்தலின் பேரில் 551 வது பிரிகேட் படையினரின் ஆதரவோடு உணவுப் பொதிகள் தயாரிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டன.

சுகாதார காரணங்களால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பயனாளிகள் மீன்பிடி சமூகமாக காணப்பட்டது.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம் கே ஜயவர்த்தனவின் வழிகாட்டுதலின் கீழ் 551 வது பிரிகேட் தளபதி மற்றும் 16 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப சமைத்த உணவு பொதிகளை வீட்டு வாசலுக்கே கொண்டு சென்று பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் நலம் விரும்பிகள் ஆதரவளித்தனர்.