Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2021 13:00:38 Hours

இலங்கை பீரங்கி படையினரால் வறிய குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

இலங்கை பீரங்கிப் படையினரால் நன்கொடையாளர்கள் சிலரது உதவியுடன் செவ்வாய்க்கிழமை (20) பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ரொட்டவெவ மற்றும் மின்னேரியா பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு அவசியமான நிவாரண பொதிகளை விநியோகிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

7 வது இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிரியநாத் கரவிட்ட அவர்களின் மேற்பார்வையில் மேற்படி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

7 வது இலங்கை பீரங்கிப் படையின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரண பொதிகள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.