Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2021 12:00:38 Hours

கூட்டுப்படைகளுக்கு புதிய வசதிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பூநகரி 66 வது படைப்பிரிவின் 662 வது பிரிகேட் வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடியதாக நிறுவப்பட்ட கூட்டுப் படைகளுக்கான புதிய கட்டடம் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்கவால் சனிக்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.

புதிய எரிபொருள் நிலையம், களஞ்சியம், நலன்புரி விற்பனை நிலையம், அலுவலக வளாகம் மற்றும் சிப்பாய்களுக்கான தங்குமிட வசதிகள் அமைந்துள்ள மேற்படி தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்த தளபதி கட்டட வளாகத்தையும் பார்வையிட்டார்.

பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.