Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2021 14:00:38 Hours

கெமுனு ஹேவா படைப்பிரிவு தலைமையக தளபதிக்கு பிரியாவிடை

35 வருட இராணுவ சேவையின் பின்னர் இலங்கை இராணுவத்தின் 57 வது பதவி நிலை பிரதானியும் கெமுனு ஹேவா படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு 2021 ஜூலை மாதம் 16 ம் திகதி கெமுனு ஹேவா படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கெமுனு ஹேவா படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.ஆர்.என்.ஜயமான்ன பிரதம விருந்தினருக்கு வரவேற்பு அளித்ததோடு தலைமையக நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டததோடு, போரில் உயிர் நீத்த கெமுனு ஹேவா படை வீரர்களது நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இவ்விழாவின் போது, தலைமையகத்தின் சகல அதிகாரிகளும் சிப்பாய்களும் ஓய்வுபெறும் புகழ் மிக்க அதிகாரியின் அர்பணிப்பான சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு அவருக்கு ஆரோக்கியமானதும், செழிப்பானதும், அமைதி மிக்கதுமான வளமான வாழ்வு கிட்ட வேண்டும் என்றும் வாழ்த்தினர்.

அவரது இராணுவத் தலைமைத்துவத்தையும் இராணுவத்திற்கு வழங்கிய ஈடு இணையற்ற பங்களிப்புக்கும் அங்கிகாரமாக இராணுவ பதவி நிலை பிரதானி்க்கு சிறப்பு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டதோடு இலங்கை புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட இராணுவ பயிற்சிக் கட்டளைகள் தளபதி சேன வடுகே அவர்களுடனான மாலை நேர விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.