Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2021 16:00:38 Hours

பூநகரியிலுள்ள 92 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

கொழும்பு ரோயல் கல்லூரியின் 1982 ஆம் ஆண்டு மாணவர்களின் ஒத்துழைப்புடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழுள்ள படையினர் இணைந்து பூநகரி பகுதியிலுள்ள 92 ஏழைக் குடும்பங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் வெள்ளிக்கிழமை (23) விநியோகிக்கப்பட்டன.

நாட்டில் நிலவும் தொற்று நோய் பரவல் நிலைமைக்கு மத்தியில் பூநகரி பகுதியில் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்போருக்கான நிவாரணங்களை வழங்கும் நோக்கில் “நீங்களும் நாங்களும் - வலுவாய் ஒன்றுபடும்போது வெற்றி நிச்சயம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி விநியோகத்திற்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய பூநகரி பிரதேச செயலக அதிகாரிகளால் பிரதேச செயலக பகுதிகளில் மிகவும் பொருத்தமான குடும்பங்களைத் தெரிவு செய்திருந்தனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் 661 வது பிரிகேட் தளபதி, 662 வது பிரிகேட் தளபதி, கேணல் நிர்வாகம், 66 வது படைப்பிரிவு, சிவில் விவகார அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், பூநகரின் பிரதேச செயலாளர் மற்றும் சில கிராம சேவகர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.