Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2021 17:00:38 Hours

மாதுரு ஓயாவில் விஷேட காலாட் படை பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டோரின் விடுகை அணிவகுப்பு

மதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் சிறப்பு காலாட்படை நடவடிக்கைகள் தொடர்பான பாடத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்ட 7 அதிகாரிகள் மற்றும் 174 சிப்பாய்களின் விடுகை அணிவகுப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது.

விடுகை அணிவகுப்பு விழாவின் பிரதம விருந்தினராக மதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் அனில் சமரசிறி கலந்து கொண்டார். இதன் போது சிறந்த பேறுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது பயிற்சிகளை வெற்றிகரமான நிறைவு செய்தவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க பிரதம விருந்தினருக்கு பிரதம பயுற்சி ஆலோசகரால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி சிறந்த குறிபார்த்து சுடும் வீரருக்கான விருதை கஜபா படையணியின் சாதாரண சிப்பாய் ஏஜிஏஏ குமார பெற்றுக்கொண்டதோடு, சிறந்த உடல் தகுதிக்கான விருது 2 (தொ) கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் காப்ரல் எஸ்.சீ.சூரியராச்சிக்கு வழங்கப்பட்டது.

அதனையடுத்து சிப்பாய்களின் சிறந்த வீரருக்கான விருது 23 வது இலங்கை சிங்க படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.என்.பி ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டது.

அத்தோடு சிறந்த படைப்பிரிவுக்கான விருது சிங்கப் படைக்கும், சிறந்த அதிகாரிக்கான விருது கெமுனு ஹேவா படையணியின் லெப்டினன் கேணல் டி.பி.செனரத்துக்கு வழங்கப்பட்டது.

மேற்படி விசேட காலட்படை பாடநெறியில் இலங்கை இராணுவத்தின் சமிஞ்சை சிப்பாய்கள், பொறியியலாளர் சிப்பாய்கள், இலங்கை இராணுவ மருத்துவப் படையினர், இலங்கை விமானப்படையினர், குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலை மற்றும் பீரங்கி படை பயிற்சி பாடசாலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்குபற்றினர். மேலும் இராணுவ பயிற்சி பாடசாலையின் பாடநெறிகளில் விஷேட காலாட் படை பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.