Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2021 20:00:38 Hours

11 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் 300 நிவாரண பொதிகள் விநியோகம்

அண்மையில் 11 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் ஏற்பாட்டில் வெவ்வேறான மூன்று பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 300 நிவாரண பொதிகள் கண்டி பல்லேகலை பிரதேசத்தில் கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன.

11 வது படைப்பிரிவு தலைமையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொறியியலாளர் திரு ஏ புலுமுள்ள, பேராசிரியர் மனோஜ் ஜயவர்தன ஆகியோரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் அரிசி, பருப்பு, மசாலா, தானியங்கள், டின் மீன், பால் மா என்பன அடங்கிய நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் பல்லேகலை ருஹூனு சவிகம சமூக மண்டபத்தில் 100 பொதிகளும் யக்கஹாபிட்டிய பகுதியில் 110 நிவாரண பொதிகளும், தெகல்தோருவ ரஜமஹா விகாரை வளாகத்தில் 100 நிவாரண பொதிகளும் குண்டசாலை பிரதேச செயலக வளாகத்தில் 90 பொதிகளுமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்பீசீயூகே ரத்னமலல மற்றும் சில நன்கொடையாளர்களும் குறித்த பகுதிகளில் நிவாரண பொதிகளை விநியோகிப்பத்ற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.