Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2021 10:00:42 Hours

621 வது பிரிகேடினரால் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் 621 வது பிரிகேட் மற்றும் 14 வது இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களின் ஒருங்கிணைப்பில் வௌ்ளிக்கிழமை (16) 62 வது படைப்பிரிவு தளபதி உபாலி குணசேகர அவர்களின் வழிகாட்டலில் நிவாரண பொதிகளை விநியோகிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் - 19 பரவல் காலத்தில் சமூகத்தில் பெரிதும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குவதை நோக்கமான கொண்டு இத்திட்டம் பதவிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

621 வது படையணியினரால் அன்றாட வருமானங்களை இழந்து குறைந்தபட்ச வருமானங்களுடன் அவதிப்படும் வறிய குடும்பங்களின் கர்ப்பிணி பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

திரு ஜாலிய போதினாகொட, திருமதி ஜெயத்ரி போதினாகொட, செல்வி எம் சேனாதீர, திருமதி எஸ் ஆபேரத்ன, திரு சுபுன் டி சில்வா, திருமதி எஷானி டி சில்வா மற்றும் திருமதி ஜயதிலக்க ஆகியோரால் 50 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் 621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பெரகும் 621 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 14 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி , பேராசிரியர் சந்தன தேவப்பிரிய, சிரேஷ்ட குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி நிரோஸா மற்றும் படையினரும் விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.