Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2021 16:35:28 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இராணுவ தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் சமூக திட்டத்தின்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையை கொண்டு கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் வசிக்கும் தேவையுள்ள மேலுமொரு குடும்பத்திற்கான புதிய வீடொன்று 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

குறித்த வீட்டை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் கலந்துகொண்டதோடு, தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது இத்தாலியில் வசிக்கும் பாதுக்க பகுதியை சேர்ந்த திரு புஷ்ப குமார அவர்களினால் குழந்தைகளும் உள்ள வறிய குடும்பத்திற்கு வீட்டை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஒருமைப்பாட்டினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சமூக திட்டம் 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சமிந்த குமாராவின் மேற்பார்வையில் நிறைவு செய்யப்பட்டது. அவர்களது கட்டுமான நிபுணத்துவத்திற்கு மேலதிகமாக, 20 வது இலங்கை இலேசாயுத காலாட்படையினரால் கிளிநொச்சி முக்கொம்பன் பகுதியில் வசிக்கும் திரு உதயசூரியன் என்பவரின் குடும்பத்திற்கு அவசியமான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபகரண பொருட்களை பெற்றுக்கொடுத்தனர்.

இந்து மத சம்பிரதாயங்களுக்கமைய உரிய சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து, முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர், 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க, 662 பிரிகேட் தளபதி சமிந்த லியானகே மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் இந்த திட்டத்தை மேலும் விஸ்தரிக்கும் வகையில் , கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதி உதவியுடன் 20 (தொ) விஜயபாகு காலாட் படை படைப்பிரிவினரால் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த திரு ஜோசப் கமலாஸ் பெர்னாண்டோ எனும் வறிய குடும்பத்திற்கான புதிய வீடொன்றும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் கலந்து கொண்டதோடு, பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லெண்ணம், நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இப்பகுதியில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதே சந்தர்ப்பத்தில், அதே 20 (தொ) விஜயபாகு படையினாரால் தனியார் நன்கொடையாளர்களின் உதவியுடன் வீட்டு உபகரணங்கள், நிவாரண பொதிகள் மற்றும் காய்கறிகளும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க மற்றும் 662 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த லியானகே ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 20 (தொ) விஜயபாகு படையினார் மனித வள உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவம்சமாக வீட்டின் நிர்மாண பணிகளை மேற்கொண்ட படையினருடன் கலந்துரையாடிய மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களது பணிக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.