25th July 2021 18:00:42 Hours
இராணுவ தலைமையக பொதுப் பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ இயந்திரவியல் காலாட் படையின் 12 வது படைத் தளபதியாக 2021 ஜூலை மாதம் 21 ம் திகதி இயந்திரவியல் காலாட்படை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
பதவியேற்பு நிகழ்விற்கு வருகை தந்த படைத் தளபதியினை நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் லசந்த பாலச்சந்திர இயந்திரவியல் காலாட்படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக பிரியதர்ஷன மற்றும் இயந்திரவியல் காலாட்படை நிலையத் தளபதி பிரிகேடியர் சாகர வனசிங்க ஆகியோரால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர், இயந்திரவியல் காலாட்படை படையினர் இராணுவ மரபுகளுக்கு அமைவாக தங்களது புதிய படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.
மத அனுஸ்டானங்களுக்கு பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
அடுத்து, மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ இந்த குறிப்பிடத்தக்க நாளைக் குறிக்கும் வகையில் ஒரு மரக்கன்றினை நட்டி வைத்தார். அதைத் தொடர்ந்து படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலைகளுக்கான தேநீர் விருந்திலும் கலந்துக் கொண்டார்.
இயந்திரவியல் காலாட்படை பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.