24th July 2021 10:00:42 Hours
மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே புதன்கிழமை (21) தியதலாவ 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படை (எஸ்.எல்.சி.எம்.பி) மற்றும் 8 வது இலங்கை இராணுவ சேவைப் படை (எஸ்.எல்.ஏ.எஸ்.சி) ஆகியவற்றிக்கு விஜயம் செய்தார்.
குறித்த படைகளின் கட்டளை அதிகாரிகள் வருகை தந்த மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் மரியாதை செலுத்தி வரவேற்றனர். அதேவேளை வருகை தந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மரக்கன்று நடல், அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்து மற்றும் படையினருக்கான உரை என்பவற்றில் கலந்து கொண்டார்.
இந்த உரையின் போது தளபதி அனைத்து நிலைகளினது ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், சிறந்த அர்ப்பணிப்பு சேவைகளுக்கு சிறந்த ஒருங்கிணை்பை பேணுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த வருகையின் முடிவில், வருகை தந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது எண்ணத்தை விருந்தினர் புத்தகத்தில் பதிவிட்டார். மத்திய பாதுகாப்புப் படை தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.