Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2021 11:00:42 Hours

யாழ் கட்டளைத் தளபதி தனது கட்டுப்பாட்டு அலகுகளுக்கு விஜயம்

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு 2021 ஜூலை 22 ம் திகதி வியாழக்கிழமை வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதி மற்றும் அதன் கீழ் வழங்கல் கட்டளை அலகுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதி தலைமையகத்திற்கு வந்தபோது வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதி தளபதியினால் வரவேற்கப்பட்டார். பின்னர் தனது விஜயத்தின் போது மாங்கன்று நாட்டல், பணியாளர்களுடன் குழு படம் எடுத்தல் படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலைக்கான தேனீர் விருந்து என்பவற்றில் பங்கேற்றார்.

அதன்பிறகு, மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு 5 வது இலங்கை போர்கருவிகள் படை, 4 வது இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படை ஆகியவற்றை பார்வையிட்டார். முகாம் வருகையின் போது யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையக தளபதி தனது விஜயத்தின் அடையாளமாக மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், சிரேஸ்ட பணி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பகுதி படையினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.