Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2021 15:00:42 Hours

இராணுவ வைத்தியசாலைக்கு ரூபசிங்க சகோதரர்கள் அம்பு அஸ்கோப் கருவி பரிசளிப்பு

இங்கிலாந்தின் நோர்த்வூட்டை வசிப்பிடமாக கொண்ட ரூபசிங்க சகோதரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இலங்கை இராணுவத்தின் மீதான மரியாதை மனப்பான்மையையும் கொவிட் - 19 ஐ ஒழிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பையும் கருத்திற் கொண்டு 2021 ஜூலை 22 ம் திகதி இராணுவ வைத்தியசாலையின் கொவிட் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ரூ .790, 000.00 மதிப்புள்ள அம்பு அஸ்கோப் கருவியை நன்கொடையாக வழங்கினர்.

இது இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவிடம் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் திருமதி சுனேத்ரா ரூபசிங்கவால் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நன்கொடை கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கதிரியக்க நிபுணர் பிரிகேடியர் தில்ருக்ஷி முனசிங்கவால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இதன் போது இராணுவ பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கிறிஸாந்த பெர்னாண்டோ , கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் ஜூட் பெரேரா , இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் கேணல் சம்பக அத்தநாயக்க மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மயக்க மருந்து வைத்திய நிபுணர் கேணல் சம்பிக அபேசிங்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.