Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd July 2021 07:00:13 Hours

யாழ்ப்பாண புதிய தளபதி மரியாதை செலுத்தல்

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு பண்டைய ஸ்ரீ நாகதீப புராதன ராஜமகா விகாரை மற்றும் யாழ்ப்பாண நல்லூர் கோயிலுக்கு புதன்கிழமை (21) சில சிரேஸ்ட அதிகாரிகளுடன் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதே தினம் (21), மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு கணபதிபிள்ளை மகேஷனையும் மரியாதை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

சந்திப்பின் போது கொவிட் - 19 ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சிவில் - இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டு நல்லிணக்கம் போன்ற பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. கலந்துரையாடலின் போது 51 வது படைப்பிரிவு தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி மற்றும் 512 வது பிரிகேட் தளபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.