23rd July 2021 08:45:13 Hours
இன்று காலை (23) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,721 பேர் கொவிட 19 தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில், 7 பேர் வெளிநாட்டிலிருந்நது வந்த இலங்கையர்கள். ஏனைய 1,714 பேர் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள். இதில் பெரும்பான்மையாக கொழும்பு மாவட்டத்தில் 347 பேரும், கம்பாஹா மாவட்டத்தில் 218 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 209 பேரும் ஏனைய மாவட்டங்களில் 940 பேரும் இணங்காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (23) காலை வரை, இறந்தவர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 291,297 கொவிட் 19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 182,247 பேர் புத்தாண்டுக்குப் பிறகு பதிவாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (23) காலை (கடந்த 24 மணிநேரம்) 910 தொற்றாளர்கள் இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஜூலை 21 திகதி 25 ஆண்களும் 17 பெண்களும் உட்பட 42 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை (23) நிலவரப்படி ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் 65 இல் 4,112 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை (23) காலையில் 910 பேர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துக் கொண்டு 29 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (23), தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் முன்னர் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளில் மாற்றமில்லை.