Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2021 08:00:46 Hours

டெவோன் நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் இராணுவம்

ஞாயிற்றுக்கிழமை (18) திம்புள்ள பத்தன டெவன் நீர்வீழ்ச்சியில் விழுந்த பெண்ணை தேடும் பணிகளில் 58 வது படைப்பிரிவின் படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தலவாக்கலை லிந்துலவை சேர்ந்த பவித்ரா (19) என்ற சிறுமி தனது மூன்று நண்பர்களுடன் நீர்வீழ்ச்சி பகுதிக்கு வருகை தந்து மலையின் உச்சியில் ஏறியதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர் தனது கால்களைக் கழுவ முயன்றபோது அவரது சமநிலையை இழந்து விழ்ந்துள்ளார்.

பொலிஸ் தகவல்களுக்கு இணங்க, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 58வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில் படையினர் மோசமான காலநிலைக்கு மத்தியில் ஈரமான, வழுக்கும் பகுதியில் குறித்த யுவதியினை தேடும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (23) காலை நிலவரப்படி அதிக பனிமூட்டம் மழை, மற்றும் அடர்த்தியான புதர் காரணமாக படையினரால் யுவதி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.