20th July 2021 09:00:19 Hours
மேஜர் ஜெனரல் சமந்த சில்வா இராணுவத் தலைமையகத்தின் வழங்கல் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதை அடுத்து 22 வது படைப்பிரிவு தளபதி பதவியை 2021 ஜூலை மாதம் 18 ம் திகதி துறந்தார்.
நியமனம் கைவிடப்படுவது தொடர்பாக 22 வது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அவரின் பதவி துறப்பின் அடையாளமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்றினை நாட்டி வைத்ததுடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். பின்னர் 22 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் நவீனமயமாக்கப்பட்ட ஜிம்னாசியத்தையும் திறந்து வைத்தார்.