Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2021 20:18:20 Hours

22 வது படைப்பிரிவு புதிய தளபதி கடமை ஆரம்பம்

கஜபா படையின் மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹர திங்கட்கிழமை (19) கிழக்கின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரிவின் 27 வது தளபதியாக பதவியேற்றார்.

சுருக்கமான மத அனுஸ்டனங்களுக்கு மத்தியில் பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவரது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றுக்ெகாண்டார்.

பதவியேற்பு நிகழ்வில் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் சமந்த சில்வா இராணுவத் தலைமையகத்தின் வழங்கல் பணிப்பாளர் நாயகமாக (கியூஎம்ஜி) நியமிக்கப்பட்டதன் பின்னர் இவர் குறித்த நியமனத்திற்கு நியமிக்கப்பட்டார்