Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2021 19:00:42 Hours

மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய இராணுவ பதவி நிலை பிரதானி அலுவலகம் பொறுப்பேற்பு

கெமுனு ஹேவா படையின் மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இன்று (20) தனது புதிய அலுவலகத்தில் ஒரு எளிய விழாவில் மத அனுஸ்டனங்கள், ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள் மத்தியில் இராணுவத் தலைமையகத்தில் 58 வது இராணுவ பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் அதிமேதகு ஜனாதிபதியால் இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியாக 2021 ஜூலை 17 ம் திகதி முதல் மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அலுவலகம் வந்தவுடன் ஒரு பௌத்தராக புத்த பெருமானை வணங்கினார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஹுனுபிட்டி கங்காரமய விகாரையின் தலைமை தேரர் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்சாஜி தேரோ தலைமையிலான மகா சங்க உறுப்பினர்கள் புதிய அலுவலகத்தில் ஆசீர்வாதம் கோருவதற்கான பிரித் பாராயணத்திற்கு மத்தியில் புதிய பதவி நிலை பிரதானி தனது கையொப்பத்தை அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவரது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார்.

சுருக்கமான பதவியேற்பு விழாவில் மதகுருமார்களுக்கு தானம் வழங்கல் இடம்பெற்றதுடன் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் கிப்பாய்கள் அவரை வாழ்த்துவதற்காக அங்கு கூடியிருந்தனர்

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவி நிலை பிரதானி பதவியைப் பெறுவதற்கு முன்பதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக பணியாற்றினார். மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் சுருக்கமான சுயவிபரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இந்நியமனத்திற்கு முன்பதாக யாழ்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 25 வது தளபதியாக 1921 ஜனவரி மாதம் 19 ம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, 59 வது படைப்பிரிவு தளபதி , 51 வது படைப்பிரிவு தளபதி , 513 வது பிரிகேட் தளபதி, 144 வது பிரிகேட் தளபதி, ஸ்ரீ ஜெயவர்தனபுர புதிய பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் சில அலுவலகங்களில் பதவிவகித்துள்ளார். அவர் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் ஆவார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யூ ஒரு போர்க்குணமிக்க போர்வீரராக அமைதிக்காக வன்னியில் நடந்த மனிதாபிமான நடவடிக்கையின் உச்சக்கட்டத்திற்கு தீவிரமாக பங்களித்தவர். அவரது படைகள் எல்.டி.டி.இ.யின் முக்கிய கோட்டைகளான மாங்குளம் நகரம், ஒலுமடு, அம்பகமம் போன்றவற்றை உடையார்க்கட்டுக்குளம் வரை கைப்பற்றியதுடன், எல்.டி.டி.இ நீர்மூழ்கிக் கப்பல் வளாகத்தையும் அழித்தனர், அதே நேரத்தில் 593 வது பிரிகேட் மற்றும் 631 வது பிரிகேட்டிற்கு கட்டளையிட்டார். மே 2009 இல் வெற்றிகரமான நிறைவிற்கு வந்த மனிதாபிமான நடவடிக்கையின் பிறகு, அவர் 533 வது பிரிகேட்டிற்கு தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், வெவ்வேறு திறன்களில் மாறுபட்ட நியமனங்களில் கடமையாற்றியுள்ளார். பெரும்பாலும் அதிக தீவிரம் கொண்ட செயல்பாட்டு சூழலில், அவர் ஒரு வீரம் கொண்ட காலாட்படை வீரராக அங்கீகரிக்கப்பட்டார். 5 வது கெமுனு ஹேவா படையின் குழு தலைவராக அவர் வடமராச்சி நடவடிக்கையில் பங்கேற்றார், பின்னர் திருகோணமலை பகுதியில் பணியாற்றினார். தாய்நாட்டை இரக்கமற்ற பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க பலவேகய மற்றும் அகுனுபஹார நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அவர் பெரும் அர்ப்பணிப்பு செய்தார். 7 வது கெமுனு ஹேவா படையின் கம்பணி தலைவராக மன்னார் - சிலவத்துரை கடல் புலி தளத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட முதல் வான்வழி தாக்குதலில் தீவிரமாக பங்கேற்றார். போர் அரங்கில் நிபுணத்துவ திறன்களைக் கொண்ட அவர், யாழ்ப்பாண நகரத்தை விடுவிப்பதில் ரிவிரெச நடவடிக்கையின் போது முக்கிய பங்கு வகித்தார். 2000 ஆம் ஆண்டு 9 வது கெமுனு ஹேவா படையின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்றபோது, மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆணையிறவு தோல்வியை எதிர்கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்தார்.

கமாண்டோ பிரிகேட்டின் கீழ் 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியாக 2007 ஆம் ஆண்டில் தொப்பிகலையை விடுவிப்பதில் அவர் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். மேலும் அவரது படைக்கு கட்டளையிட்ட 593 வது காலாட்படை பிரிகேட்டிற்கு எல்.டி.டி.ஈ. இடமிருந்து முல்லைத்தீவு பகுதியைக் கைப்பற்றவும் தக்கவைத்திருக்கவும் தனது படையுடன் முழுமையாக பங்களித்தவர்.

உள்நாட்டு வெளிநாட்டு இராணுவ பயிற்சிகளை பெற்றுள்ள அவர் இந்தியா மோவ் காலாட்படை பயிற்சி பாடசாலையில் கனிஸ்ட கட்டளை பாடநெறி , இந்தியா வெரிகேட் இராணுவ பயிற்சி பாடசாலையில் எதிர் கிளர்ச்சி மற்றும் வன போர் நுட்ப பாடநெறி , ஐக்கிய அமெரிக்க இராணுவ போர் கல்லூரியில் பயங்கரவாததிற்கு எதிரான செயற்பாட்டு பாடநெறி மற்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மூலோபாய பயிற்சி பாடநெறி என்பவற்றால் வளம பெற்றவர்.

இதேபோல், சீனாவின் முதுநிலை மூலோபாய முகாமைத்துவம் மற்றும் இராணுவ அறிவியல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவத்தில் முதுகலை பட்டம், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள் டிப்ளோமா (பிஐடிடிஐ), இலங்கை கடற்படையில் சர்வதேச துறைமுகங்கள் மற்றும் கடல்சார் சான்றிதழ் பாடநெறியில் படித்தவர். வெளியுறவு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு நடத்திய குறியீடு மற்றும் பயங்கரவாதத்திற்கான விரிவான பாதுகாப்பில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசிபிக் மையம், மூத்த பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமா - இந்தியா மற்றும் மனித வள முகாமைத்துவ நிர்வாக டிப்ளோமா - கொழும்பு பல்கலைக்கழகம் என்ற கல்வித் தகமைகளை கொண்டவர்.

கொழும்பு 05 இசிபதன கல்லூரியின் பெருமைமிக்க மாணவரான இவர் 1986 ஜூன் மாதம் 2 ஆம் திகதி நிரந்தர படை ஆட்சேர்ப்பு பாடநெறி இல 24 க்கு பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை பயிற்சி முடித்த பின்னர் அவர் பாக்கிஸ்தான் மங்லா, அதிகாரிகள் பயிற்சி பாடசாலையில் (OTS) அதிகாரி பயிற்சி பாடநெறி மற்றும் பாகிஸ்தான் குவெட்டா காலாட்படை மற்றும் தந்திரோபாய பாடசாலையில் ஆயுதம் அதிகாரி மற்றும் இளம் அதிகாரிகள் பாடநெறி நெறியை பின்பற்றியவர் பின்னர் அவர் இரண்டாவது லெப்டினண்டாக நியமிக்கப்பட்டு, 18 மே மாதம் 1987 அன்று 4 வது கெமுனு ஹேவா படைக்கு நியமிக்கப்பட்டார்.