20th July 2021 16:07:04 Hours
4 வது இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் படை மற்றும் 5 வது பொறியியல் சேவைப் படை படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்ட சேதன பசளை தயாரிப்பிக்கான மர இலைகளையும் கிளைகளையும் ஊடுருவக்கூடிய “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” இயந்திரம் சேதன பசளை உருவாக்கும் திட்டத்தில் ஈடுப்பட்டுள்ள யாழ்ப்பாண படையினரின் பயன்பாட்டிற்காக ஞாயிற்றுக்கிழமை (18) உத்தியோகப் பூர்வமாக கையளிக்கப்பட்டது.
சேதன பசளை உற்பத்தியை தொடங்கியுள்ள யாழ்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” என பெயரிடப்பட்டுள்ள மணிக்கு 3.5 தொன் 10 மிமீ துவல்களை உற்பத்திச் செய்யக் கூடிய இந்த இயந்திரம் உற்பத்தி திட்டத்திற்கு பெரும் உந்துச் சக்தியாக அமையும் என குறிப்பிட்டார்.
இதன் சந்தை பெறுமதி ரூ. 750,000.00 ஆகும் ஆனால் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையும் பொறியியல் சேவைப் படையும் இணைந்து சுமார் 150,000.00 ரூபாய் செலவில் இயந்திரத்தை உற்பத்தி செய்துள்ளனர். யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் மேற்பார்வையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பணிநிலை அதிகாரி ஒன்று (வழங்கல்) லெப்டினன்ட் கேணல் P.D.L.A.C சிறிசேன அவர்களால் வடிவமைக்கப்பட்டது.
அறிமுக விழாவில் அன்றைய பிரதம அதிதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா உற்பத்தி செயல்முறையை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார் மற்றும் அதன் செயல்பாட்டு அம்சங்களைப் பார்த்தபின் படையினருக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி பராமரிப்பு பகுதி பிரிகேடியர் பொதுப் பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், பிரிகேட் தளபதிகள் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலற்துக் கொண்டனர்.