Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2021 18:21:01 Hours

கள பொறியியலாளர்கள் மேலும் இரு பாடசாலைகளின் திட்டங்கள் இரு மாதங்களுக்குள் நிறைவு

ஜனாதிபதியின் இராணுவத் தளபதிக்கான ஜுலை மாத மூன்றாம் வாரத்தின் உத்தரவிற்கு அமைவாக தலைமை கள பொறியியலாளர் மற்றும் பொறியியல் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மொனராகல மாவட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட மூன்று பாடசாலைகளில் இரு பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மீதகம தேசிய பாடசாலை மற்றும் ஹம்பேகமுவ கனிஸ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் விளையாட்டு மைதானங்கள் கடந்த மே மாதம் ஜனாதிபதியின் குறித்த மாவட்டத்திற்கான விஜயத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டங்கள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு முறையாக பாடசாலை அதிகாரிகள் மற்றும் அந்த பாடசாலை மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக தனமல்விலவில் நடைபெற்ற 8 வது ‘கம சமக பிலிசந்தரக்’ கிராம எழுச்சி திட்டத்தின் போது மாவட்டத்தில் 6 பாடசாலைகளின் மேம்பாட்டுப் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. முதல் மூன்று புனரமைப்பு திட்டங்களில், கொட்டவேர மங்கட மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் முழுமையான மற்றும் முழு வடிகால் அமைப்பின் புனரமைப்பு பணிகள் அறிவுறுத்தலின் படி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

திட்டங்கள் முதன்மை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியியலாளர் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் தள பொறியியலாளர் பிரிகேட்டினால் கண்காணிக்கப்பட்டன. இந்த திட்டங்களின் ஊடாக 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.