20th July 2021 09:10:19 Hours
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அளித்த உத்தரவின் பேரில் புதிதாக கட்டப்பட்ட தெம்பிட்டிய இலங்கை இராணுவ கள துப்பாக்கிச் சூட்டு தளம் அதன் துப்பாக்கிச் சூடு பயிற்சி அமர்வுகளை வெள்ளிக்கிழமை (16) தொடங்கியது.
புதிய துப்பாக்கி சூட்டு களத்தின் உட்கட்டமைப்பு ஏற்பாடுகளை பொதுப் பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ நேரடியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி , 22 வது படைப்பிரிவ் தளபதி மற்றும் சில அதிகாரிகளுடன் களத்திற்கு விஜயம் செய்து மேற்கொண்டிருந்தார்.
சிவில் நிர்வாக துறையினருடனான பல்வேறு மட்டங்களில் பல சுற்று விவாதங்கள் நடைபெற்ற பின்னர் இராணுவத் தளபதியின் முழுமுயற்சியால் துப்பாக்கிச் சூட்டு களம் பெறுவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்பட்டது.
புதிய களம் வரையிலான வீதி கட்டமைப்பு மேம்படுத்துதல், பெயர் பலகைகள் அமைத்தல், வானொலி தொடர்பு வலையமைப்புக்கள் நிறுவுதல், பொதுமக்களின் பாதுகாப்பு, விடுதி அமைப்பு புதிய களத்தை ஒட்டியிருத்தல், விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு போன்றவை புதிய துப்பாக்கி சூட்டு களத்தை நிறுவுவதில் இராணுவம் முக்கியமாக கவனம் செலுத்தியது.
மினேரிய காலாட்படை பயிற்சி மையம் மற்றும் பீரங்கி பயிற்சி பாடசாலை ஆகியவற்றின் துப்பாக்கி சுடும் வீரர்கள் புதிய சூட்டு களத்தில் பயிற்சி அமர்வுகளைத் தொடங்கினர்.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 24 வது படைப்பிரிவு ஆகியவற்றின் தொழில்நுட்ப ரீதியாக தகுதிவாய்ந்த படையினரின் உதவியுடன் குறுகிய காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டது. அங்குரார்பண விழாவில் காலாட்படை பயிற்சி மையத்தின் தளபதி பிரிகேடியர் கல்ப சஞ்சீவ, பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமில முனசிங்க, மற்றும் பீரங்கிப் பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் ரோஷான் கண்ணங்கர உள்ளிட்ட பல சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.